‘டைட்டானிக்’ வரிசையில் வரலாறு படைக்கப்போகும் ‘காஸி’..!

gazhi release

டைட்டானிக் என்கிற பயணக்கப்பல் மூழ்கியதையும் அதனோடு சேர்த்து ஒரு காதலும் மூழ்கியதையும் உணர்வுப்பூர்வமாக சொல்லி ஹிட் ஆன பிரமாண்ட ஹாலிவுட் படம் தான் ‘டைட்டானிக்’. இதேபோல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு கப்பலை பற்றிய படமாக உருவாகி இருக்கிறது ‘காஸி’.. ஆனால் ஹாலிவுட்டில் அல்ல.. இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழியில்.

1971-ம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பலான காஸி இந்திய ராணுவத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இதை மையமாக கொண்டுதான் உருவாகி வருகிறது இந்த ‘காஸி’. டைட்டானிக் என்பதும் காஸி என்பதும் கப்பல்களின் பெயர்கள் என்கிற ஒற்றுமையை தவிர இந்த இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான்.. ஆனால் டைட்டானிக் போல வரலாறு படைக்கும் விதத்தில் மிக பிரமாண்டமான தேசபக்தி படமாக இது உருவாகியுள்ளது.

ராணா, டாப்ஸி, நாசர், கே.கே.மேனன், அதுல்குல்கர்னி, ரகுல்சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் மறைந்த இந்தி நடிகர் ஓம்பூரி நடித்துள்ள கடைசி படம் இது. மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே இசை அமைத்துள்ளார். சங்கல்ப் என்ற புதுமுகம் இயக்குகிறார் தயாராகும் இந்தப்படத்தை பிவிபி சினிமா தயாரித்துள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் பிப்-17ஆம் தேதியன்று இந்தப்படம் ரிலீஸாகிறது.