“என் அடுத்த படம் ரசிகர்கள் கையில் தான் உள்ளது” ; கஜினிகாந்த் இயக்குனர் வேண்டுகோள்..!

Ghajinikanth PressMeet

ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள கஜினிகாந்த் படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. . . கடைக்குட்டி சிங்கம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த சாயிஷா சைகல் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘நடிக்கிறார். ஆர்யாவின் நண்பர்களாக கருணாகரன், சதீஷ் இருவரும் நடிக்க ஆடுகளம் நரேன், உம்பா பத்மநாபன், சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் ஆர்யா ஞாபகமறதி மன்னனாக நடித்துள்ளார்.

பாலமுரளி என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். . கௌதம் கார்த்திக் நடித்த ‘ஹரஹர மஹாதேவகி’ மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து’ என சர்ச்சையை கிளப்பிய இரண்டு படங்களை இயக்கிய இந்தப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். வரும் ஆக-3ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு ‘கஜினிகாந்த்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்..

இந்த சந்திப்பின்போது பேசிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், “இதற்கு முந்தைய இரண்டு படங்களையும் அடல்ட் காமெடி படம் என்றே சொல்லித்தான் எடுத்தேன். அதற்கு 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க்க கூடிய படம் என்றுதான் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தார்கள்.. இதையெல்லாம் பார்த்துவிட்டு கூட, இந்தப்படத்தை குடும்பத்துடன் பார்க்கமுடியுமா என மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பினார்கள். அந்தப்படம் யாருக்காக எடுக்கப்பட்டதோ,அவர்கள் அதை ரசித்து பார்த்தனர்.

இதோ இப்போது குடும்பத்துடன் பார்க்கும் படமாக இந்த ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கியுள்ளேன்.. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்துதான் எனது அடுத்த படம் இருக்கும்.. தயவுசெய்து ‘மீண்டும் ‘ஏ’ படம் எடுக்கும் சூழலுக்கு என்னை தள்ளிவிடாதீர்கள்” என கேட்டுக்கொண்டார்.