ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

 

நடிகர்களுக்கு எப்படி சின்ன குழந்தைகளை தங்கள் பக்கம் கவர்ந்திழுப்பது கஷ்டமான வேலையோ, நடிகைகளுக்கு அதைவிட கஷ்டமானதுதான் அந்த வேலை. ஆனால் சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தின் மூலம் தனது சுட்டித்தனமான நடிப்பால் குழந்தைகள் உட்பட அனைவரின் மனதிலும் இடம்பிடித்த ஜெனிலியாவுக்கு நேற்று முன் தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளரான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ள் திருமணம் செய்துகொண்ட ஜெனிலியா அதன்பின் திரையுலகை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். இன்று அழகான ஆண் குழந்தைக்கு தாயாக மாறியிருக்கும் அவருக்கும் அவரது கணவருக்கும், தமன்னா, சித்தார்த், ப்ரியாமணி, ஸ்ரீதேவி உட்பட பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளார்கள்.