கலைவாணர் அரங்கில் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ இசை வெளியீட்டு விழா..!

Gemini-Ganeshanum-Suruli-Raajanum-1

அம்மா க்ரியேஷன்ஸின் வெள்ளிவிழா திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அதர்வா மற்றும் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு கதாநாயகிகள் நடிப்பில் இந்தப்படத்தை பிரம்மாண்டமாகவும், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது

ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் புகழ்பெற்ற கலைவாணர் அரங்கத்தில் வைத்து வரும் ஜூன் 23 ஆம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.