உருவாகிறது விக்ரம்- கௌதம் மேனன் கூட்டணி..?

 

‘என்னை அறிந்தால்’ பட வெற்றி மூலம் தனது பலம் என்னவென்று அறிந்த கௌதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிறார். இந்தப்படத்தில் அவருடன் கைகோர்க்கப்போவது ‘சீயான்’ விக்ரம். அதற்கேற்ற மாதிரி சமீபத்தில் விக்ரம் – கௌதம் மேனன் சந்திப்பும் நிகழ்ந்திருக்கிறது. அப்போது கௌதம் சொன்ன கதையும் விக்ரமிற்கு பிடித்துவிட்டதாம்.

ஒண்ணு, ரெண்டு என அஞ்சு எண்றதுக்குள்ள, கௌதம் மேனன் தற்போது முக்கால்வாசி முடித்து நிலுவையில் வைத்திருக்கும் சிம்பு படத்தை முடித்துவிட்டு வருவதற்கும், விக்ரம் தற்போது நடித்துவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை மார்ச்சில் முடித்துவிட்டு வருவதற்கும் நேரம் சரியாக இருக்குமாம்..  கௌதம் மேனன் காட்டவிருக்கும் ஸ்டைலிஷான விக்ரமை பார்க்க தயாராகுங்கள்.