எம்.ஜி.ஆர் பாடல் வரியை டைட்டிலாக வைத்தார் கௌதம் மேனன்..!

 

அஜித் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்ததின் சுவராஸ்யமான பின்னணி என்னவென்று தெரியுமா..? எம்.ஜி.ஆர் ‘வேட்டைக்காரன்’ படத்தில் பாடிய ‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்” என்கிற பாடலின் முதல் வார்த்தையை கொஞ்சம் மாற்றி ‘என்னை அறிந்தால்’ என டைட்டிலாக வைத்துவிட்டார்.

தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னொரு செயலையும் செய்துள்ளார் கௌதம் மேனன். சிம்புவை வைத்து தான் இயக்கிவரும் படத்திற்கு முதலில் அவரது படத்தின் பாடல் வரியான ‘சட்டென்று மாறுது வானிலை’ என முதலில் டைட்டில் வைத்தார் கௌதம் மேனன். ஆனால் அதை ஏற்கனவே வேறொருவர் பதிவு செய்துவிட்டதால் கொஞ்ச நாட்களாக அந்த விஷயத்தை ஆறப்போட்டிருந்தார்.

தற்போது ‘என்னை அறிந்தால்’ ஹிட்டை தொடர்ந்து தனது படத்திற்கு மீண்டும் எம்ஜி.ஆரின் சூப்பர்ஹிட் பாடலில் இருந்து ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற வரிகளை எடுத்து அதையே சிம்புவின் படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார். படம் லவ் ஸ்டோரி தான் என்றாலும் ஆக்சனை மையப்படுத்தி தான் கதை பின்னப்பட்டுள்ளதாம்.

வாழ்க்கையில் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் தைரியமாக அதை எதிர்கொள்ளவேண்டும் என்பது தான் படத்தின் மையக்கரு.. அதற்கு இந்த டைட்டில் தான் பொருத்தமாக இருப்பாதாக சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன். எப்படி இருந்தாலும் தனது படங்களுக்கு தூய தமிழில் பெயர் வைத்துவரும் கௌதம் மேனன் உண்மையான பாராட்டுக்குரியவர் தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தில் பல்லவி சுபாஷ் என்ற வட இந்திய மாடல் கம் நடிகையை அறிமுகப்படுத்துகிறார் கௌதம் மேனன்.