என்ன விளக்கம் சொல்லப்போகிறார் கௌதம் மேனன்..?

“ சிறுவயதில் இருந்து பிளாக் டீயாக குடித்ததால் அஜித்தின் முடி நரைத்திருக்கிறது என இந்தமுறை அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு லாஜிக் சொல்லிவிடுகிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் தொடர்ந்து பார்த்தால் போரடித்து விடும் அல்லவா..? அடுத்த படத்தில் அஜித் இந்த லுக்கை மாற்றி விடுவார் என நம்புவோம்”
– இது வீரம் படத்தின் விமர்சனத்தில் நாம் குறிப்பிட்டிருந்த வரிகள்.

ஏற்கனவே ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களிலும் இதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருந்தார் அஜித். தற்போது கௌதம் மேனன் டைரக்‌ஷனில் தனது 55வது படத்தில் நடித்து வரும் அஜித் நிச்சயம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு இந்தப்படத்தில் விடைகொடுத்து விடுவார் என நினைத்திருந்த வேளையில் மீண்டும் அதே லுக்கில் தோன்றி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

‘வீரம்’ படத்தில் பிளாக் டீ மாதிரி இந்தப்படத்திலும் அஜித்தின் தொடரும் இந்த ஹேர்ஸ்டைலுக்கு லாஜிக்காக என்ன விளக்கம் தரப்போகிறார் கௌதம் மேனன்..?