தந்தை-மகனை இணைத்து படம் இயக்கும் திரு…!

gautham karthik film

விஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் திரு.. மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் இல்லையென்றாலும் கூட, இந்த ஆளிடம் ஏதோ விஷயம் இருக்குய்யா என சொல்லும் விதமாக ஒவ்வொரு படத்திலும் மேக்கிங் ஸ்டைலில் வித்தியாசம் காட்டியிருப்பார் திரு. இப்போது லேட்டஸ்ட்டாக கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்..

இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகியுள்ளது. இதில் இன்னொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் கௌதம் கார்த்திக்கின் தந்தை நவரச நாயகன் கார்த்திக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் காமெடி நடிகர் சதீஷும் இணைந்துள்ளார்.