தரையில் படுத்து தூங்கினார் கௌதம் மேனன்..!

வரும் வியாழக்கிழமை என்னை அறிந்தால் படம் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த தேதியில் படத்தை எப்படியும் ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக பகலில் மட்டுமல்ல, இரவெல்லாம் விழித்திருந்து வேலைகளை விரைந்து முடித்திருக்கிறார்கள் இயக்குனர் கௌதம் மேனனும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.. கடைசி நாள் வேலை முடிந்து வீட்டுக்கெல்லாம் போகவில்லை இருவருமே.. ஹாரிஸின் ஸ்டுடியோவிலேயே படுத்துவிட்டார்கள்..

பின்னே அந்த அளவுக்கு அசதியும் அலுப்பும் இருந்தால், தரையில் படுத்து, கைகளையே தலையணையாக்கி அசந்து தூங்கியிருப்பார் கௌதம் மேனன்.. ஹாரிஸ் மட்டும் என்னவாம்.. நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கியிருக்கிறார்.. இவர்கள் கடின உழைப்பிற்கும் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்ததற்கும் மரியாதை செய்யும் விதமாக படம் வந்திருக்கிறதாம்.