மலையாள படப்பிடிப்பை முடித்த கணேஷ் வெங்கட்ராம்..!

my story ganesh v raman

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘மை ஸ்டோரி’.. ‘என்னு நிண்டே மொய்தீன்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிருத்விராஜ்-பார்வதி இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்குகிறார்

இதில் ஸ்பெஷல் அம்சமாக தமிழில் இருந்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு போர்ச்சுக்கல், ஜார்ஜியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவந்த கணேஷ் வெங்கட்ராம். இந்தப்படத்தில் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை நடித்துக்கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.