விஜய் டைரக்சனில் ஜி.வி.பிரகாஷ்..!

gv-prakash-al-vijay

இயக்குனர் விஜய் தற்போது ஒரே சமயத்தில் சாயபல்லவி நடித்துள்ள ‘கரு’ மற்றும் பிரபுதேவா நடித்துள்ள ‘லட்சுமி’ என இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன.

இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் விஜய். இந்தப்படத்தின் வேலைகள் ஏப்-25ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறதாம். இயக்குனர் விஜய்யின் முதல் படமான ‘கிரீடம்’ முதல் தொடர்ந்து அவரது படங்களில் இசையமைத்து வந்தவர் தான் ஜி.வி.பிரகாஷ்.

அதன்பின் அவர் ஹீரோவானதால் அந்த இசை கூட்டணியை இடைவிடாது தொடர முடியாமல் போனது.. இந்தநிலையில் ஒரு ஹீரோவாக இயக்குனர் விஜய்யுடன் ஜி.வி.பிரகாஷ் கைகோர்க்கிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.