படப்பிடிப்புக்கு ஆட்டோவில் வந்த ஜி.வி.பிரகாஷ்..!

enakku innoru per irukku 1
‘டார்லிங்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் இரண்டாவது படம் தான் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.. அதுமட்டுமல்ல, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ வெற்றிக்கு பிறகு நடிகை ஆனந்தியுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் 2வது படமும் கூட. இப்படத்திற்காக சமீபத்தில் வித்தியாசமான அதேநேரம் சுவரஸ்யமான சண்டைக்காட்சி சென்னையில் மோகன் ஸ்டுடியோவில் பெரும் பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு மாலை 6 முதல் காலை 6 வரை தொடர்ந்து நடைபெற்றது. ஒருநாள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த ஜி.வி.பிரகாஷ், மிகுந்த டிராபிக்கில் சிக்கிகொண்டாராம். ஆனாலும் தனது தாமதத்தால் ஷோடிங் பாதிக்கப்படக்கூடாது என்று ஆட்டோவில் வந்திறங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.