முதல்ல கார்த்தி..! நெக்ஸ்ட் விஷால்..! லிங்குசாமியின் மெகா பிளான்..!

 

லிங்குசாமி டைரக்‌ஷனில் வெளியான ‘பையா’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. சொல்லப்போனால் கார்த்தியை குழந்தைகள் அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்த படமும் இதுதான்.

கிட்டத்தட்ட எழு வருடங்களுக்குப்பின் கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘எண்ணி ஏழு நாள்’. 2௦15ல் தனது முதல் புராஜெக்டாக இதை இயக்கம் லிங்குசாமியின் அடுத்த டார்கெட் சண்டக்கோழி பார்ட்-2..

விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜை ஏற்படுத்தி கொடுத்த படம் தான் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி’. இந்த வெற்றிக்குப்பின் இருவரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ‘சண்டக்கோழி-2’வில் இணைய இருக்கிறார்கள்.. ஆக கார்த்தி, விஷால் மூலமாக லிங்குசாமி மீண்டும் வானவேடிக்கை நிகழ்த்துவார் என்பது உறுதி..!