சேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய உருவாகியுள்ள படம் மட்டி (Muddy). டாக்டர் பிரகாபால் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் இந்தியாவின் முதல் ‘சகதி ரேசிங்’ திரைப்படம் ஆக உருவாகியுள்ளது. அதாவது இதுவரை சாலைகளில் நடைபெற்று பந்தயங்களை தவிர்த்து கரடுமுராடான, சேறும் சகதியும் நிறைந்த சாலைகளில் ஜீப் வாகனங்களுக்கு இடையே நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் மற்றும் ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .

படம் பற்றி சமீபத்தில் நடைபெற்ற பத்தரிகையாளர் சந்திப்பில் எடிட்டர் சான் லோகேஷ் பேசியது படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது “மட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.ராட்சசன் படம் முடித்த பின் எனக்கு மாலிவுட்ல இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்னபோது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது.இந்தப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அப்போது ஷுட் செய்த புட்டேஜை காட்டினார்கள். இந்தப்படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன். வொர்க் பண்ணவும் ரொம்ப இன் ட்ரெஸ்டாக இருந்தது. இயக்குநரிடம் கொஞ்சம் டைம் கொடுத்தால் நன்றாக பண்ணலாம் என்று சொன்னேன். இப்போ படம் ரொம்ப நல்லா வந்திருக்கு” என்றார் ஷான் லோகேஷ்.