பிப்-9ல் ‘சி-3’ ரிலீஸ் ; லேட்டா வந்தாலும் சிங்கம் சிங்கம் தான்..!

சூர்யாவின் சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்கள் அதிரடி போலீஸ் படங்கள் என்பதற்காக ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.. இவற்றின் மூன்றாம் பாகமான ‘சி-3’க்கும் அதே எதிர்பார்ப்பு தான் இருந்தது.. ஆனால் ‘சி-3’ படத்துக்கு மட்டும் இயற்கையே சீரான இடைவெளியில் ஒவ்வொரு தடையாக ஏற்படுத்தி அந்தப்படத்தின் ரிலீசை தள்ளித்தள்ளி போட வைப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

முதல் அறிவிப்பாக டிச-16ல் ரிலீஸ் என உறுதியளித்தார்கள்.. ஆனால் அதன்பின் செல்லாத நோட்டு விவகாரம், முதல்வர் ஜெயலலிதா மரணம், வார்தா புயல், பொங்கலுக்கு ‘பைரவா’ ரிலீஸ் என பல காரணங்களால் தள்ளிப்போனது. ஒருவழியாக ஜன-26ஆம் தேதி நாள் குறித்தார்கள்..

ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தொடங்கி இடைவிடாமல் நீடித்ததும், இந்தமுறையும் படம் வெளியாகுமா என்கிற சிக்கல் எழுந்தது..

ஆனால் ரிலீஸ் தேதிக்கு முன்கூட்டியே போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அந்த தாக்கம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் விலகட்டும், அதற்காக இரண்டு வாரங்கள் காத்திருப்போம் என தற்போது வரும் பிப்-9ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார்கள்.

ஆக, லேட்டா வந்தாலும் சிங்கம் சிங்கம் தானே..