வேலைக்காரனுக்காக சொந்தக்குரல் கொடுத்த பஹத் பாசில்..!

fahad fazil dubbing

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா கூட்டணியில் ‘வேலைக்காரன்’ படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தயாராகி வருகிறது. மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசில் தற்போது முதன்முறையாக இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதன மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்..

இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.. பஹாத் பாசில் இவ்வளவு நாட்களாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க தயக்கம் காட்டியதே தமிழ் பேசுவது சற்று சிரமம் என்பதால் தான்.. ஆனால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த அனுபவத்தில் இப்பொது தானே டப்பிங் பேசி அசத்தியுள்ளார் பஹத் பாசில்.