‘எனக்குள் ஒருவன்’ மார்ச்-6ல் ரிலீஸ்..!

 

2௦13ல் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய ‘லூசியா’ என்ற படம் தான் தற்போது தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ என உருவாகியுள்ளது. இந்தப்படம் எப்போதடா ரீமேக்காகும் என காத்திருந்து, வான்ட்டடாக தேடிப்போய், இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார் சித்தார்த். அறிமுக இயக்குனரான பிரசாத் ராமர் இந்தப்படத்தை இயக்க, படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

விஸ்வரூபம் படத்தில் “இங்க எல்லாருக்குமே டபுள் ரோல்” என ஆண்ட்ரியா சொல்வதுபோல,. கிட்டத்தட்ட‘எனக்குள் ஒருவன்’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இந்த டயலாக் மாதிரிதானாம். சித்தார்த்துக்கு ஜோடியாக கதாநாயகி தீபா சந்நிதி தமிழுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைக்கிறார். தவிர ஆடுகளம் நரேன், ஜான் விஜய், யோக் ஜேபி, அஜய்ரத்தினம் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட்ஸ், சஷிகாந்த்தின் ஓய் நாட் ஸ்டுடியோ, அபினேஷின் அபி டிசி.எஸ் ஸ்டுடியோ மற்றும் வருண்மணியனின் ரேடியன் மீடியா என நான்கு முக்கிய ஜாம்பவான்கலும் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். வரும் மார்ச்-6ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.