ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு கௌரவம் செய்த அக்சய் குமார்..!

enakku inoru per irukku - akshay 1

டார்லிங் வெற்றிப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் சாம் ஆன்டனும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. ஜி.வி.பிரகாஷுடன் கதாநாயகி ஆனந்தியும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.. இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையும் அமைத்துள்ளார்..

லைக்கா நிறுவனம்தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல்களை பாலிவுட் நடிகர் அக்சய் குமார் இன்று வெளியிட்டார்.. லைக்கா நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பான ‘2.O’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அக்சய் தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் தான் தங்கி நடித்துக்கொண்டுள்ளார்.

அதனால் தான் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் பாடல்களை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளார் அக்சய்.. இதற்கென தனி விழா எல்லாம் வைக்காமல், அக்சய் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே வைத்து பாடல்களை வெளியிட்டு புதுமை படைத்திருக்கிறார்கள்.