விஷாலுடன் ஜோடி சேரும் எட்டாவது மலையாள ஹீரோயின்.

நமது தமிழ்சினிமாவில் மும்பை நடிகைகளின் வரவு அடிக்கடி தொடர்ந்து நிகழ்ந்தாலும் மலையாள ஹீரோயின்களின் ஆதிக்கம் தான் பல நாட்களாகவே ஓங்கியிருக்கிறது.. அந்தவகையில் அதிகப்படியான மலையாள ஹீரோயின்களுடன் நடித்த ஹீரோ என்கிற பெருமை விஷாலுக்குத்தான் பொருந்தும்..

இதுவரை மீரா ஜாஸ்மின், பானு, ப்ரியாமணி, மம்தா மோகன்தாஸ், நயன்தாரா, ஜனனி ஐயர், லட்சுமி மேனன் என ஏழு மலையாள ஹீரோயின்களுடன் ஜோடியாக நடித்துள்ள விஷாலின் அடுத்த படத்தில் கதாநாயகியாக இன்னொரு மலையாள நடிகையான நித்யா மேனன் நடிப்பார் என தெரிகிறது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்துவரும் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவருகிறார்.. விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் உருவான ‘பாண்டியநாடு’ படத்தை தொடர்ந்து ‘பா’ வரிசை சென்டிமென்ட்டில் இந்தப்படத்தின் டைட்டில் அமைந்திருப்பது படத்திற்கு இன்னொரு ப்ளஸ்.