எடிட்டர் ஆண்டனியை அதிர்ச்சியடைய வைத்த கே.வி.ஆனந்த்..!

kavan-2
பொதுவாக இயக்குனர்கள் தங்களுக்கு மனதில் தோன்றியதை எல்லாம், அதாவது கதைக்கு தேவையென நினைத்தவற்றை எல்லாம் சகட்டு மேனிக்கு படமாக எடுத்து தள்ளிவிடுவார்கள்.. பின்னர் எடிட்டர் கையில் கொண்டுவந்து ஸ்க்ரிப்ட்டையும் மொத்த புட்டேஜையும் கொடுத்துவிட்டு ஜென்டிலாக ஒதுங்கி கொள்வார்கள்.. அவர்ரைஎல்லாம் மொத்தமாக தொகுத்தால் சுமார் நான்கு மணி நேரம் ஓடும் அளவுக்கு இருக்கும். ஆனால் அந்த ஸ்க்ரிப்ட்டில் உள்ளவற்றை சிதறாமல் கொண்டுவருவது தான் எடிட்டர்களுக்கு சவாலான விஷயமே..

ஆனால் சவாலுக்கெல்லாம் சவாலாக விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ படத்தின் எடிட்டர் ஆண்டனிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். வேறொன்றுமில்லை, சுமார் இருபது நிமிடங்கள் இடம்பெறும் க்ளைமாக்ஸ் காட்சிக்காக இருபது மணி நேர காட்சிகளை கொண்டுவந்து கொட்டிவிட்டாராம் கே.வி.ஆனந்த்..

ஆரம்பத்தில் அதிர்ச்சியானாலும், மணிக்கணக்கில் உள்ள அந்த க்ளைமாக்ஸ் புட்டேஜை கச்சிதமாக நறுக்கி நிமிடங்களுக்குள் கொண்டுவரும் சவால் தனக்கு பிடித்திருப்பதாக கூறி படத்தொகுப்பு பணிகளில் மும்முரமாகிவிட்டாராம் ஆண்டனி.