ஜெயம் ரவி தந்தையின் திக் திக் நாட்கள்…!

editor mohan

சமீபத்தில் வெளியான ‘பூலோகம்’ படம் மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இது ஜெயம் ரவியின் வெற்றி மகுடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு வைரம் தான்.. இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கும் ஒரிஜினல் பாக்சரான நேதன் ஜோன்ஸ்க்கும் இடையே நடைபெறும் குத்துச்சண்டை காட்சிகள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்..

சமீபத்தில் இந்த வெற்றியை பத்திரிகையாளர்களுடன் ஜெயம் ரவி பகிர்ந்துகொண்டபோது உடன் இருந்த அவரது தந்தை எடிட்டர் மோகன், இந்தப்படத்தில் நடித்த ஜெயம் ரவிக்காக தான் பயந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்..

“இந்தப்படத்தில் நடித்துள்ள நேதன் ஜோன்ஸ் மிகச்சிறந்த பாக்ஸர்.. அவருடன் ரவி பாக்ஸிங் காட்சிகளில் நடிக்கும்போது தெரியாமல் அடிபட்டு விடுமோ என பயந்துகொண்டே இருந்தேன்.. அதேசமயம் பாக்ஸிங் காட்சிகளில் கவனமாக இரு என ரவிக்கு எச்சரிக்கையும் செய்துவந்தேன்” என கூறினார்