நான்கு நாயகிகளுடன் துல்கர் நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம்..!

Ra.Karthik - dulquar

மலையாளம், தமிழ் என பிரித்துப்பார்க்க முடியாதபடி யொங்கே தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துவிட்டார் இளம் நடிகர் துல்கர் சல்மான்.. மெகாஸ்டார் மம்முட்டியின் மகனான இவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழில் நடிப்பதற்கும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.. அந்தவகையில் வாயை மூடி பேசவும் மற்றும் ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்த துல்கர் மூன்றாவதாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் என்பவர் இயக்கவுள்ளார்.. இந்தப்படத்தின் கதையை, கத்தி, தெறி படங்களின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மூலமாக துல்கரிடம் சொல்ல இந்தப்படத்தில் நடிக்க உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம் துல்கர் சல்மான்..

இந்தப்படத்தில் மொத்தம் நான்கு நாயகியர் நடிக்கின்றனர். நான்கு கதாபாத்திரங்களுமே நன்கு வடிவமைக்கப்பட்டவையாம். அதுமட்டுமல்ல வழக்கமான கிளிஷே காட்சிகள் இல்லாமல் புதுமையான மற்றும் தனித்துவமான ஒரு பயணம் சார்ந்த படமாக இருக்குமாம். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறது.