கண்களை கொள்ளையடித்த துல்கர் பட பர்ஸ்ட் லுக்..!

kkk first look 1

சோலோ படத்தை தொடர்ந்து தமிழில் நேரடியாக துல்கர் சல்மான் நடித்துவரும் படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் காதல் படமாக உருவாகி வருகிறது.

அதனால் தான் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை காதல் குறியீடான ஆர்ட்டின் வடிவத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்காக துல்கர், ரிது இருவரின் விதவிதமான போஸ்களை ஒன்றிணைத்து இந்த வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் இதன் சிறப்பம்சமே..