துல்கர் சல்மான் நடிக்கும் ‘சோலோ’ ; ஹைலைட்ஸ்..!

solo highlights

துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் மூன்றாவது படமாக ‘சோலோ’ உருவாகி வருகிறது. படத்தின் பெயரே ‘சோலோ’ தான். விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து தமிழில் ‘டேவிட்’ என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இது உருவாகிறது.

இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். தன்ஷிகா, நேஹா சர்மா, தீப்தி சதி, ஆர்த்தி வெங்கடேஷ், ஆன் அகஸ்டின் ஆகியோர் தான் அந்த ஐந்து பெரும்.

இந்தப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்…

இது நான்கு குறும்படங்களை இணைத்து உருவாகும் ஆந்தாலாஜி வகை படமாக இருந்தாலும், அந்த நான்கிலும் துல்கர் சல்மானே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாவதால் கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடித்தது போன்ற களைப்பு ஏற்பட்டதாக கூறுகிறார் துல்கர் சல்மான்.