மணிரத்னம் படத்தில் துல்கர் – அலியா பட்..?

மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக மம்முட்டியின் மகனும் வாயை மூடி பேசவும் ஹீரோவுமான துல்கர் சல்மான் நடிப்பதாக தகவல். துல்கரிடம் கேட்டால் என் படம் பற்றிய அறிவிப்புகள் எல்லாமே படத்தின் டைரக்டர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தான் வெளியிடுவார்கள என ஜகா வாங்குகிறாராம்.

அதுமட்டுமல்ல.. தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்த அலியா பட், இந்தப்படம் மூலமாக தற்போது தமிழர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறாராம்.. ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது. அதனால் என்ன.? இப்போது தான் ஜாக்பாட் மாதிரி மணி சார் படம் கிடைத்துவிட்டதே..