கவலைவேண்டாம் போக்கிரி ராஜா : இனி உங்களுக்கு திருநாள் தான்..!

Don't Worry Pokkiriraja, All Day Are Good Day

யான் பட தோல்விக்கு பின்னர் படங்களே இல்லாத மாதிரி ஒரு தோற்றம் ஜீவாவுக்கு உருவானது போல தோன்றினாலும் ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ மற்றும் ‘போக்கிரிராஜா’ என மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டு நான்காவது படத்திற்காக தயாராகி வருகிறார் ஜீவா.இந்த நான்காவது படத்தை ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்குவார் என தெரிகிறது.

1942ல் நடைபெறும் இந்த கதை போர்க்களத்தை பின்னணியாக கொண்ட காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். இதற்கான ஸ்கிரிப்ட்டிற்கு பைனல் டச் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறாராம் சத்யசிவா. சமீபத்தில் வெளியான இவரது ‘சிவப்பு’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்ததக்கது.