விஷால் திருமணம் பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம்

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த கட்டடம் திறக்கப்பட்ட பின்புதான், இதில் அமைய உள்ள திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்றும் அவர் பலமுறை கூறிவிட்டார்

இந்த நிலையில் அவர் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார் என கூறி ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இணைத்து தவறான செய்திகளை சிலர் வெளியிட்டு வருகிறார்கள் இது முற்றிலும் தவறான செய்தி.

அதுமட்டுமல்ல தேவையில்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் விளையாடுவது போன்றது என்றும் விஷால் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளது மேலும் அவரது திருமணம் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின்பு அது பற்றிய செய்திகளை வெளியிடுமாறும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.