சுசீந்திரனை ஹீரோவாக்கி(ய) ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’..!

suttupidikka-utharavu

இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் வரிசையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனும் ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா எடுக்கவிருக்கும் அடுத்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சுசீந்திரன். இந்தப்படத்துக்கு ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இந்தப் படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சிறிய ஹிந்த் கொடுத்துள்ளார்.

விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான ‘க்ரைம்’ நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே இந்தப்படத்தின் கதை.