“கார்த்தி சரியான சாப்பாட்டு பிரியர்” ; உண்மையை உடைத்த சுதா..!

Thozha 2902
கார்த்தியை பற்றிய கடந்தகால சுவாரஸ்யமான உண்மை ஒன்று ‘தோழா’ இசை வெளியீட்டு விழாவில் வெளிப்பட்டது. அதை வெளிப்படுத்தியவர் ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா.. ‘தோழா’ படக்குழுவினரை வாழ்த்துவதற்காக வந்திருந்த சுதாவும் படத்தின் நாயகன் கார்த்தியும் இயக்குனர் மணிரத்னத்திடம் ஒன்றாக உதவி இயக்குனர்களாக வேலை பார்த்தவர்கள்.. அந்த நட்பில் தான் சுதா வாழ்த்த வந்திருந்தார்.

விழாவில் பேசிய அவர், “நானும் கார்த்தியும் மணி சாரிடம் ஒன்றாக வேலை பார்த்தோம்.. ஷூட்டிங்கின்போது சூர்யா நிதானமாக, அளவாக, நாசூக்காக சாப்பிடுவார்.. ஆனால் கார்த்தியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அப்படியே அள்ளிப்போட்டு சாப்பிடுவார்.. இதை பார்த்த மணி சார் கார்த்தியிடம், உங்க அண்ணனை பாரு.. நீ மட்டும் ஏம்ப்பா இப்படி சாப்புடுற என கேட்பார்.

உடனே கார்த்தி அங்கிருந்து எழுந்து வேறு பக்கமாக போய்விடுவார்.. உடனே மணி சார் அவன் கோவிச்சுட்டு சாப்டாம இருக்கப்போறான்.. போய்ப்பாரு என்பார்.. அங்கே போய் பார்த்தால், எந்த கோபமும் இல்லாமல் இன்னும் ப்ரீயாக உட்கார்ந்து அதே அளவு சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார் கார்த்தி” என தங்களது பணி சம்பந்தமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் சுதா கொங்கரா.