அருவிக்கு புகழாரம் சூட்டிய ஷங்கர்..!

ஜோக்கர், அறம் என சில படங்கள் அத்தி பூத்தாற்போல தமிழ் சினிமாவில் பூத்து நம் மக்களின் உணர்வுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் வேலையை செய்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள அருவி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பார்த்தவர்கள் அனைவரும் ‘அருவி’யை இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படம் என்று பாராட்டி வருகிறார்கள்.. ரசிகர்களிடம் மட்டுமல்லாது, திரையுலகினரையும் மிரள வைத்திருக்கிறது இந்த அருவி. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ஜாம்பவான்களும் அருவி திரைப்படத்தை பாராட்டி வந்தனர்.

இப்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான டைரக்டர் ஷங்கர் ‘அருவி’ திரைப்படத்தை பற்றியும், இயக்குநர் அருண் பிரபு மற்றும் கதாநாயகி அதிதிபாலன் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

லேட்டஸ்டாக உதயநிதியும் அருவிக்கான தனது பாராட்டை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.