“சென்சாரின் அணுகுமுறை மாறியிருப்பது வரவேற்கத்தக்கது” ; ‘ஜோக்கர்’ இயக்குனர்..!

Joker

‘குக்கூ’ இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த படைப்பாக உருவாக்கி இருக்கும் படம் ‘ஜோக்கர்’.. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் ஒரு அரசியல் நையாண்டி படமாக உருவாக்கி இருக்கிறது.. உடனே இது வழக்கம்போல நமது அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்கும் படமோ என நினைக்கவேண்டாம்.

நம் சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் ஊடுருவியுள்ள அரசியலை அம்பலப்படுத்தும் படமாகத்தான் இது உருவாகி இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வில் சுழன்றடிக்கும் அரசியலையும் அதன் உண்மையான காரணகர்த்தா யார் என்பதையும் மக்களுக்கு உரைக்கும் விதமாக படத்தை இயக்கியுள்ளார்..

வழக்கமாக அரசியல் படமென்றால் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடும்.. ஜோக்கர் படம் ஏற்கனவே “என்னடா உங்க அரசியல்’ என்கிற பாடல் மூலமாக எலெக்சன் நேரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. ஆனால் ‘ஜோக்கர்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்லதொரு கருத்துள்ள படத்தை தான் எடுத்திருப்பதாக சொல்லி ஒரு காட்சியை கூட வெட்டச்சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் தந்துள்ளனர்.

“சென்சாரின் இந்த அணுகுமுறை நிச்சயம் பாராட்டுக்குரியது.. அந்தவகையில் சமூக மாற்றத்திற்கான படங்கள் நிறைய வரும் வாய்ப்பை இது உருவாக்கும்” என சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சென்சார் குழுவினரை மனமுவந்து பாராட்டினார் ராஜூ முருகன்.