ரஜினி படம் வெளிவர உதவிய கமல் ; ‘வாகா’ விழாவில் வெளிப்பட்ட உண்மை

wagha
ரஜினி படம் வெளிவருவதில் கமல் உதவும் அளவுக்கு என்ன சிக்கல் இருந்துவிடப்போகிறது என சாதரணமான ஒரு கேள்வியுடன் இந்த விஷயத்தை கடந்துபோய்விடமுடியாது.. காரணம் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் நடந்த முக்கியமான நிகழ்வு இது..

ஆம்.. இயக்குனர் மகேந்திரன் தனது முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கு முன் படத்தை போட்டு பார்த்தாராம். ஒருசில முக்கியமான காட்சிகளை மட்டும் படமாக்கவேண்டி இருந்ததாம். ஆனால் தயாரிப்பாளரோ இனி பணம் தரமுடியாது என மறுத்துவிட்டாராம்.

இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை தனக்கு அறிமுகப்படுத்திய கமலிடமே இந்த விவரத்தை சொன்னாராம் மகேந்திரன். அதன்பின் கமல் போய் பேசியும் அந்த தயாரிப்பாளர் மசியாததால், அவரின் ஒப்புதலோடு, எடுக்க வேண்டிய மீதி காட்சிகளுக்கு கமல் தனது சொந்தப்பணத்தை செலவுசெய்து படத்தை முடிக்க உதவி செய்தாராம்..

கமல் அன்று உதவிசெய்யவில்லை என்றால் ‘முள்ளும் மலரும்’ படம் வெளிவராமல் போயிருக்கும் என்றும் அப்படி ஒருவேளை வெளியாகி இருந்தால் கூட எதிர்பார்த்தபடி அமையாமல் போயிருந்திருக்கும் என இன்று காலை நடைபெற்ற விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் மகேந்திரனே நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்..