கே.எஸ்.ரவிகுமாரின் மகள் திருமண வரவேற்பு ; திரண்டது திரையுலகம்..!

ksr daughter wedding
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மாளிகாவுக்கும் அர்ஜுன் கிருஷ்ணன் என்பவருக்கும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்ற திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழக கவர்னர் ரோசய்யா இந்த வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கமல், கவுண்டமணி, இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களை விழாவில் காண முடிந்தது.. கே.எஸ்.ரவிகுமாரின் ஆத்மார்த்த நண்பரான சரத்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்ததால் ராதிகாவும் அவரது மகள் ரேயானும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.