கார்த்திக் சுப்புராஜை அதிரவைத்த எஸ்.ஜே.சூர்யா..!

Iraivi Movie Still 20

இதுநாள்வரை ஒரு நடிகராக எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்களை பார்த்து, இவரென்றால் இப்படித்தான் என ரசிகர்கள் அவரைப்பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.. ஆனால் அந்த இமேஜை தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘இறைவி’ படம் உடைத்து தூளாக்கும் என அவரே நம்புகிறாராம்..

காரணம் கார்த்திக் சுப்புராஜின் ஸ்க்ரிப்ட் அப்படி.. படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்யச்சென்ற கார்த்திக் சுப்புராஜ், அவரிடம் கதை சொன்னபோது சூர்யாவுக்கு அவ்வளவாக புரியவில்லையாம். ஆனாலும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து தமிழ்சினிமாவை திரும்பி பார்க்கவைத்தவர் என்பதால் எதுபற்றியும் கேட்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்..

பின்னர் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு நடந்தபோதுதான் கார்த்திக் சுப்புராஜின் டைரக்சன் சூட்சுமமும் கதையின் வெயிட்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு புரியவந்ததாம்.. இதை ஒருநாள் கார்த்திக் சுப்புராஜிடமே அவர் சொல்லப்போக, அப்படியானால் இத்தனை நாட்கள் கதை என்னவென்று தெரியாமல் தான் நடித்தீர்களா என ஜாலியாக கலாய்த்தாராம் கார்த்திக் சுப்புராஜ்.