தேசபக்தி பாடலுக்கு ஒரு கோடி ரூபாயில் செட் போட்ட இயக்குனர் கண்ணன்..!

boomarang

ஆர்.கண்ண்ணன் டைரக்சனில் அதரவா நடித்துவரும் படம் ‘பூமராங்’.. இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் தேசப்பற்று பாடல் ஒன்றுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகையில், “ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட ஆக்சன் படம் தான் ‘பூமராங்’. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது.. இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் மற்றும் கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது” என்கிறார்..

சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர். பூமராங் ‘ படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் “மேயாத மான் ” படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தான்.