ரஜினி-கமல் படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் காலமானார்..!

iv sasi
மலையாள சினிமாவில் பிரபல இயக்குனராக சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் வலம் வந்த இயக்குனர் ஐ.வி.சசி இன்று காலமானார்.. எழுபது வயதான இவர் சுமார் நூறு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். பிரபல நடிகை சீமா இவரது மனைவி தான்.

தமிழில் சுமார் எட்டு படங்களை இயக்கியுள்ளார். ரஜினி கமலை வைத்து அலாவுதீனும் அற்புத விளக்கும், கமலை வைத்து குரு’, ரஜினியை வைத்து காளி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, தெலுங்கில் ரஜினி-சிரஞ்சீவி இருவரையும் இணைத்து தமிழில் இயக்கிய ‘காளி’யை இருமொழிப்படமாகவும் எடுத்தார்.