கதை விவாதத்திற்காக சுவிட்சர்லாந்து பறந்தார் ஹரி..!

 

தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல ஹரி இயக்கும் படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றியை ருசித்து வருகின்றன. சமீபத்தில் விஷாலை வைத்து அவர் இயக்கிய ‘பூஜை’ படமும் வெற்றி பெற்ற நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் ஹரி.

இந்தமுறை ஹரி மீண்டும் கூட்டணி அமைப்பது சூர்யாவுடன் தான்.. ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 வரிசையில் இது இவர்கள் இருவரும் இணையும் ஐந்தாவது படமாக இருக்கும். இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்தப்படத்தின் கதை விவாதத்திற்காக தனது உதவி இயக்குனர்களுடன் சுவிட்சர்லாந்து கிளம்பி சென்றுள்ளார் இயக்குனர் ஹரி..