கௌதம் மேனன் டைரக்சனில் இணையும் பிருத்விராஜ்-ஜெயம்ரவி…!

gautham menon film

பூர்வீகம், பிறந்தது வளரந்தது எல்லாம் கேரளாவாக இருந்தாலும், தமிழ்சினிமா தான் தனது எதிர்காலம் என பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு வந்து இயக்குனராக செட்டிலாகிவிட்டார் கௌதம் மேனன். கமல், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கிய கௌதம் மேனனுக்கு இனி ரஜினி, விஜய் படங்களை மட்டுமே இயக்குவேண்டியது பாக்கி.. அந்த வாய்ப்பு கைகூடுமோ என்கிறது ஒருபக்கம் இருக்க, தனது சொந்த மொழியான மலையாளத்தில் ஒரு படமாவது இயக்கவேண்டும் என்கிற அவரதுநீண்டநாள் ஆசை வெறும் கனவாக இருக்கிறது.

இப்போது அதற்கு நேரம் கூடி வந்துள்ளதாக தெரிகிறது.. அமல் மலையாளத்தில் பிருத்விராஜ் படத்தை இயக்க இருக்கிறது. அதேசமயம் இது மலையாளப்படம் மட்டும் அல்ல.. பிருத்விராஜ் படம் மட்டும் அல்ல. ஆம் பிருத்விராஜுடன் தமிழுக்கு ஜெயம் ரவி, கன்னடத்தில் இருந்து புனீத் ராஜ்குமார் மற்றும் தெலுங்கில் இருந்து சாய் தரம் தேஜ் என நான்கு மொழிகளில் இருந்து நான்கு நடிகர்களை வைத்து மல்டிஸ்டாரர் படமாக உருவாக்க இருக்கிறதாம். கதாநாயகிகளாக அனுஷ்கா மற்றும் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.. தர்போஹு இயக்கிவரும் சிம்பு, தனுஷ் படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்தை தொடங்க இருக்கிறாராம் கௌதம் மேனன்.