சாய்குமாரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘காட்டேரி’..!

kaateri

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியவர் தான் நடிகர் சாய்குமார். தொன்னூறுகளில் டப்பிங் படங்கள் மூலமாக கண்ணீர் குரலோடு, அனல் தெறிக்கும் வசனங்களோடு தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் தற்போது, தனது மகன் ஆதியை தமிழ் சினிமாவிலேயே ‘காட்டேரி’ என்கிற படத்தின் மூலம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறார்.

யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே தான் இந்தப்படத்தை இயக்குகிறார். முழுநீள ஹரர் த்ரில்லராக இந்தப்படம் உருவாகிறது. கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் பிரீமியர் ஷோ நேற்று சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்வில் வைத்து இந்தப்படத்தின் அறிமுக விழாவும் நடைபெற்றது.