இதுதானா சேரனின் மாற்றம் முன்னேற்றம்..?

cheran

நல்ல படங்களுக்கு திரையிட தியேட்டர் கிடைக்கவில்லை என்பதால் தன்னுடைய படத்தை வெளியிடுவதற்காகவே ‘சி2எச்’ என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை டிவிடிக்களாக மாற்றி வீடுவீடாக விற்பனை செய்தார் இயக்குனர் சேரன்.. துடதிர்ஷ்டவசமாக இந்த திட்டம் வெற்றிபெறாமல் போனது..

இதனால் ‘சி2எச்’சில் முகவர்களாக பணம் கட்டி சேர்ந்தவர்கள் ஒருபக்கம் போர்க்கொடி தூக்கியதும் நடந்தது.. இப்போது லேட்டஸ்டாக சிவகாசியில் தங்களது படம் மற்றும் நிறுவனம் தொடர்பாக போஸ்டர் அச்சடித்தவகையில் சேரனும் அவரது மகளும் அச்சகத்திற்கு கொடுத்த தலா பத்து லட்சம் மதிப்புள்ள இரண்டு காசோலைகள் பணமின்றி திரும்பிவிட்டன.

இதனால் அச்சகத்தார் சேரன் மற்றும் அவரது மகள் மீது சிவகாசி கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பொருட்டு சேரனும் அவரது மகளும் சிவகாசி கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கு என்றால் வாய்தா வாங்கி பயந்து ஓடாமல் சிவகாசிக்கே சென்ற சேரனின் தைரியத்தை பாராட்டுவதா..? இல்லை தான் உருவாக்கிய புதிய நிறுவனத்தின் கட்டமைப்பு 20 லட்சம் ரூபாய் கூட கட்டவழியில்லாமல் சீகுளைந்து போனதையும் பணம் இல்லாமல் காசோலை கொடுக்கும் அளவுக்கு அவரது தரம் தாழ்ந்துவிட்டதா என நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை.

இதுதானா சேரன் காணவிரும்பிய மாற்றம் முன்னேற்றம்..?