“எச்.ராஜா மாதிரி ஆட்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது” ; பாரதிராஜா ஆவேசம்..!

bharathiraja

ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மோசமாக விமர்சித்துள்ளார் பா.ஜ.கவை சேர்ந்த எச்.ராஜா. இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் “ஆயுதத்தை மறந்து விட்டோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை” என்று எச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘.ஒரு படைப்பாளன் தனது கருத்துக்களை சொல்லலாம்.. அல்லது மேற்கோள் காட்டலாம். அதை அட்சரசுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை

கொண்டாடவேண்டிய ஒரு கவிஞனை அநாகரிகமாக பேசும் ராசாவே, இப்படி அநாகரிகமாக பேசும் அதிகாரத்தை உனக்கு தந்தது யார்..? வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா..? சோர்ந்து கிடக்கும் மனிதனை தட்டி எழுப்ப ஒரு பாடல் எழுத முடியுமா..?

அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே.. உன்னைப்போன்ற மனிதர்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்கிற அச்சம் எனக்கு வருகிறது. கவனமாக பேசுங்கள் ராசாவே.. தமிழர்கள் ஆயுதத்தை மறந்து விட்டோமே தவிர தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் விட்டு விடவில்லை”

இவ்வாறு ஆவேசமாக எச்.ராஜாவுக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.