‘அருவி’ குழுவினரை பாராட்டிய பாலா..!

bala congrats aruvi team

கடந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் ‘அருவி’. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அருவி படத்தை பார்த்த ரஜினிகாந்த்தும் இயக்குனர் ஷங்கரும் படக்குழுவையும் குறிப்பாக நாயகி அதிதி பாலனின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்கள். ரஜினி ஒரு படி மேலேபோய், “தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வருவீர்கள்” என்று இயக்குனர் அருண் பிரபுவை பாராட்டியதோடு. இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.

இப்போது பாலாவும் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிதி பாலன் கூறும்போது, ‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பெரிய இயக்குநரின் வாழ்த்தைப் பெற என்ன தவம் செய்தேன்.! இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா சார்’ என்றார்.