“சினிமா மேல்தட்டு மக்களுக்கானது அல்ல” ; அமீர் நெத்தியடி விளக்கம்..!

ameer

இயக்குனர் அமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ட்ராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமாரன், வளர்மதி, கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்ட சமூகப் போராளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் அமீர், “சினிமா என்பது மேல்தட்டு மக்களுக்கானது அல்ல.. காரணம். இங்கு மேல்தட்டு மக்கள் சினிமாவும் பார்ப்பதில்லை, வாக்குப் பதிவும் செய்வது இல்லை. பாமரர்களுக்கான நடுத்தர மக்களுக்கான சினிமாவை எடுத்துள்ளோம்” என கூறினார்.