‘தேவி’யை இயக்கியபின் இயக்குனர் விஜய் எடுத்த முடிவு..!

a-l-vijay-1

பீல்டில் பல வருட அனுபவம் கண்ட இயக்குனர்களே இருமொழிப்படங்களை இயக்க யோசிக்கும் நேரத்தில், மிக குறைந்த வயதில் மும்மொழிப்படமாக ‘தேவி’ படத்தை இயக்கி நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. பிரபுதேவா, தமன்னா என்கிற புது காம்பினேஷனில் ஹாரர் கலந்த காமெடியாக இந்தப்படம் உருவாகியுள்ளது..

இந்தப்படத்தை இயக்கி முடித்த அனுபவத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார்.. இனிமேல் மும்மொழிப்படங்களை இயக்க கூடாத என்பதுதானாம் அது.. காரணம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படங்களை இயக்கிய உணர்வும் மலைப்பும் ஏற்பட்டதாக கூறுகிறார் விஜய்..

அது மட்டுமல்ல, போஸ்ட் புரொடக்சன், புரமோஷன் என எல்லாமே மூன்று முறை வேலை வாங்கி விட்டதல்லாவா.? பிரபுதேவா, தமன்னா ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்தப்படத்தை இயக்கியதே இன்னும் கடினமாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார் விஜய். இவ்வளவு கடின உழைப்புக்கான வெற்றி நாளை வெளியாக இருக்கும் ‘தேவி’ கட்டாயம் இந்த டீமுக்கு கொடுக்கும் என்பது உறுதி.