மச்சானை வில்லனாக்கிய ஏ.எல்.விஜய்..!

amalapaul brother 1

நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால் ஏற்கனவே சில மலையாளப்படங்களில் நடித்துள்ளார். அவரது அறிமுகமே மோகன்லால் அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் மூலம் அமைந்தது.. அதைத்தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு, தன்னை வெளிச்சம்போட்டு காட்டும் கேரக்டருக்காக, படத்துக்காக காத்திருந்தார் அபிஜித் பால்.

ஆனால் அந்த வாய்ப்பு தனது மச்சான், இயக்குனர் ஏ.எல்.விஜய் மூலமாகவே வரும் என அவர் நினைத்து பார்க்கவே இல்லை. ஆம். பிரபுதேவா, தமன்னாவை வைத்து மும்மொழிகளில் தான் இயக்கிவரும் ‘தேவி’ படத்தில் வில்லனாக அபிஜித் பாலை அறிமுகப்படுத்தியுள்ளாராம். ஏ.எல்.விஜய் ஏற்கனவே நடிப்புக்காக சண்டை, நடனம், குதிரைஎர்ரம் எல்லாம் கற்றுக்கொண்டதால் அபிஜித்திடம் வேலைவாங்குவது விஜய்க்கு எளிதாகவே இருந்ததாம்.