மணிரத்னம் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார் தில் ராஜு..!

இயக்குனர் மணிரத்னம் டைரக்சனில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துவரும் ‘ஓகே கண்மணி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப்படத்தின் கதை எதைப்பற்றியது, இன்னும் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விஷயமெல்லாம் தொடர்ந்து சஸ்பென்ஸிலேயே இருக்கிறது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்திற்கு தெலுங்கில் ‘ஓகே பங்காரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்ப்பாளரும் விநியோகஸ்தருமான தில் ராஜு கைப்பற்றியுள்ளார். “மணி சார் படத்தை வெளியிடுவதில் எனக்கு பெருமை” என்கிறார் ராஜூ. வரும் ஏப்ரல் மாதம் படம் ரிலீஸாக இருக்கிறதாம்.