“யாமிருக்க பயமே 2ஆம் பாகம் எடுக்கவில்லை” – இயக்குனர் டீகே மறுப்பு

சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் அது வெளியாவதற்கு முன் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவிக்கும் என்றோ இத்தனை வெற்றிகரமாக தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் என்றோ யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கிவிட்டு இந்தவருடத்தின் மிகச்சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ற மாதிரி இயக்குனர் டீகே தயாரிப்பாளர் எல்ரெட்குமார் மற்றும் ஜெயராமன் ஆகியோர் மீண்டும் கைகோர்க்கும் அடுத்த படம் இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இயக்குனர் டீகே இதை மறுத்துள்ளார். அடுத்து தான் இயக்கவிருக்கும் படம் யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் ஆனால் பின்னாளில் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.