‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன’ படத்தில் துருவாவுடன் இணைந்த நட்சத்திர கூட்டணி..!

தான் நடித்த முதல் படத்தில் சாதாரண ஒரு இளைஞனாக ஆரம்பத்தில் தோன்றி, இடைவேளைக்குப்பின் அதிரடியாக கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றி ஆச்சர்யப்பட வைத்தவர் ‘திலகர்’ படத்தில் நடித்த நடிகர் துருவா. தற்போது அவர் நடித்துவரும் படம் தான் ‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன’.. ஆமா.. நடிகர்திலகத்தின் புகழ்பெற்ற பாடல்வரியைத்தான் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குனர் ராகேஷ்..

இப்படி கவிதையாக் அத்தலைப்பு வைக்க காரணம் என்ன..? “. சொன்னதும் சட்டென்று எல்லோரின் மனதிலும் இடம் பிடிக்கும் என்பதால் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற பாடல் வரியை படத்தின் தலைப்பாக வைத்தோம். இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்றார் இயக்குநர் ராகேஷ்.

இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை நகர்கிறது. தினம் தினம் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் அதற்கான தீர்வுடன் விளக்கும் படம் தான் இது. துருவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்க, இவர்களுடன் ஜே.டி.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றது.