விக்ரம் மகனை வர்மாவாக மாற்றி டீசர் வெளியிட்டார் பாலா..!

varma 2

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தை இயக்குநர் பாலா வர்மா என்கிற தமிழில் ரீமேக் செய்து இந்தப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ்வை தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இதுவரை அறிமுக ஹீரோக்களுடன் பணியாற்றியிராத, ரீமேக் பக்கமே போகாத பாலா, இதை செய்வது சாட்சாத் விக்ரமின் நட்புக்காகவும் அவரது வேண்டுகோளுக்காகவும் தான்.

இதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாடல் மேகா சௌத்ரி கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும், பிக் பாஸ் சீசன்-1 புகழ் ரைஸாவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் தான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார். துருவ் விக்ரமின் பிறந்தநாள் பரிசாக இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.