முதல் சம்பளத்தை கேரளாவுக்கு நிதியாக வழங்கிய துருவ் விக்ரம்

DHRUV DONATION

நடிகர் விக்ரமின் மகன் துருவ், இயக்குனர் பாலா டைரக்சனில் ‘வர்மா என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப்படம் முடிவடைந்து இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

திங்களன்று கேரளாவுக்கு நேரில் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இந்த தொகையை அளித்தார் துருவ்.. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் ஏவி அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.